Apr 21, 2011

தங்கபாலுவை உடனடியாக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை நீக்க வேண்டும்.



அன்னை சோனியா காந்தி , தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பெருமிதம் கொள்கிறபடி , திமுக தலைவர் டாக்டர் கலைஞரிடம்  வாதாடி  63   தொகுதிகளை பெற்றுத்தந்தார்.

தோண்டியப் போட்டுடைத்த ஆண்டிபண்டாரம் கணக்காக,தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கே.வி. தங்கபாலு  சுயநலத்துடன் செயல்பட்டார் , வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்தார். திரு தங்கபாலுவின் எதேச்சையான செயல்பாடு காரணமாக, பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களது வெற்றி வாய்ப்பு  கேள்விக்குரியதாக்கிவிட்டது , காங்கிரஸ் வாக்காளர் இடையே குழப்பத்தை  உருவாக்கி , காங்கிரஸ் பேருருவை சிதைத்துவிட்டது .

இவரின் இந்த முறைகேடான செயலால் சொந்த கட்சியினரிடம் இருந்தே பாதுகாப்பு தேடி வீட்டிலும் , கட்சி அலுவலகத்திலும் போலீஸ் துணையோடு நடமாடும் இவர், காங்கிரஸ் கட்சியின் கௌரவத்தையும் பெருமையையும் குழி தோண்டி புதைத்துவிட்டார். திரு . கே வி தங்கபாலுவை , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்கி தமிழக காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற வேண்டும்.

இது தொடர்பாக விரிவான கடிதம் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும் , இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் , தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அனுப்பியுள்ளேன்.

2 comments:

Vazhapadi Rama Suganthan said...

My Press release on 17/4/2011

Unknown said...

It is true! Very good chance was misused by mere selfishness. All the factions of congress would have been united, as the sharing could have been done when 63 seats were available.